அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் திடீர் உயிரிழப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் பொதுவான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அவர் நாட்டிற்கான உண்மையான தலைவராக இருந்தமை அதற்கு காரணம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
கிழக்கு மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த குணவர்தன அவர்கள், கசப்பான அனுபவம், மிரட்டல் மற்றும் கஷ்டங்கள் காரணமாக எப்பொழுதும் தான் சென்ற பாதையை விட்டுக்கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் உயிரிழப்பால் தனிமைப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
