கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் முச்சக்கர வண்டிகளை தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளாதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஐந்து இலட்சத்திற்கு அதிகமானோர், முச்சக்கர வண்டி தொழிலில் ஈடுபடுவதாக அதன் ஏற்பாட்டாளர், சுதில் ஜயருக் தெரிவித்தார்.
இதற்கமைவாக, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மாற்றான தீர்வு கிடைக்காவிடின் அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களையும் கொழும்பிற்கு அழைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இணைப்பு 2
இணைப்பு 2
கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் முச்சக்கர வண்டிகளை தடைசெய்தல் தொட்பாக எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து அமைச்சரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
