எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் கராட்டி விளையாட்டுத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கராட்டி உபகரணங்களை வழங்கியுள்ளார்.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களிடம் உத்தியோகபுர்வமாக கராட்டி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு அன்று ( 19 ) கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.பி.முஜீன், உதவி அதிபர்களான எம்.எச்.எம்.அபுபக்கர், எச்.எம்.அன்வர் அலி, கராட்டி பொறுப்பாசிரியர் யு.எல்.எம்.இப்றாஹிம், பகுதித்தலைவர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர், ஏ.ஆர்.எம்.யுசுப், உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.



