சிங்கப்பூரில் அந்நாட்டுப் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த இலங்கை அரசியல் வாதியொருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கப்பூர்வாசியான பெண்ணொருவரின் உடலை தகாத முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த அரசியல்வாதி, பொலிஸ் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மாகாண சபை உறுப்பினருடன் சிங்கப்பூர் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் இன்று நாடுதிரும்பியுள்ள போதிலும், பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் இதுவரை நாடுதிரும்பவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
