மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் 2009 சாதாரண தர மாணவர்களால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வானது நேற்று (16.01.2016) அப் பாடசாலையின் அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.
மேற்படி ஒன்றுகூடலின் பிரதான நிகழ்வாக "மனாரியான்ஸ் '09 கூட்டமைப்பு (Alliance of Manarians '09)" எனும் அமைப்புக்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, குறித்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருடனான சந்திப்பு நிகழ்வும் பசுமையான பாடசாலை நினைவுகளை மீட்டிப் பார்க்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரைகளும் அரங்கேறின.
காலை 11.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஒன்றுகூடலானது இறுதியாக மதிய போசன நிகழ்வுடன் இனிதே நிறைவடைந்தது.
இப் பாடசாலை வரலாற்றில் பழைய மாணவர் அமைப்பொன்றானது தமது சக மாணவர்கள் மட்டுமல்லாது தமக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபார்கள் ஆகியோர் அனைவரையும் ஒன்றிணைத்து இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வினை ஏற்பாடு செய்தமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக வள விருத்திக்கு தம்மால் இயன்ற பங்குபற்றல்களை வழங்குவதற்கான முயற்சிகளைச் மேற்கொள்ளவுள்ளதாகவும் மனாரியான்ஸ் '09 கூட்டமைப்பினர் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














