மத்தியமுகாமுக்கு நாளை முதல் குடிநீர் வசதி - மக்கள் பிரச்சினைக்கு தீர்வு



எம்.எம்.ஜபீர்-

த்தியமுகாம் பிரதேசத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கியினூடான குடிநீர் வினியோகத்திட்டம் நகரிலுள்ள மூவின வழிபாட்டுத்தலங்களிலும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், நிர்வாக நடவடிக்கைக்கான அலுவலக கட்டிடமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் தெரிவித்தார்.

மத்தியமுகாம் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் விநியோகத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளார்.

இதனடிப்படையில் மத்தியமுகாம் நகரிலுள்ள முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், ஸ்ரீமுருகன் ஆலயம், லும்மினி விகாரை ஆகிய வழிபாட்டு தலங்களிலேயே குடிநீர் வினியோகத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் குடியேற்றப்பட்ட விவசாயக் கிராமங்களிலுள்ள குடும்பங்களின் நீண்டகாலப் பிரச்சினையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச மக்களின் அவசியத் தேவை கருதி அடையாள ரீதியில் 150ற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீ;ரினை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீர்த்தாங்கியின் அனைத்து வேலைகளும் பூரணமாக முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்;களுக்கும் குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எம்.சீ.பைசால் காசீம், சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் யூ.ரத்தினபால, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் என்.துதேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -