அக்கரைப்பற்று காதிரிய வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் 19 ஆம் திகதி வித்தியாலய அதிபர் பரீட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இரண்டாம் தர மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்புற அலங்கரித்தன.இந்நிகழ்வில் வகுப்பாசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் அக்கறை இன்றியமையாததாகும் என இதன்போது வித்தியாலய அதிபர் பரீட் கருத்து தெரிவித்தார்.




