கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த வேண்கோள்...!

சுலைமான் றாபி-

க்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் காணப்படும் பிரதேசங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய பிரதேச சபைகளும், பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பிரதான வீதியில் அன்றாடம் அதிகளவான வாகனங்கள் பயணம் செய்வதால் இங்கு சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகள் மூலம் பல்வேறு திடீர் விபத்துச் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

இதேவேளை இப்பிரதான வீதியின் நடுவிலும், இருமருங்கிலும் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் குறிப்பிட்ட மாநகரசபை, பிரதேச சபைகளிடத்தில் முறையான திட்டம் இன்மையால் மாட்டுப்பண்ணை உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் அலட்சியத்தன்மையாகக் காணப்படுவதால் இவ்வீதியால் பயணம் செய்யும் பொதுமக்களும், பிரயாணிகளும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே இவ்விடயம் சம்பந்தமாக கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி சபைகளும், பொலிஸாரும் முறையான சட்டங்களை அமுல்படுத்துவதோடு இதனை மீறும் பண்ணை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -