சவுதி அரேபியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனுக்கு ஏராளமான அன்பளிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் உறவினர்களும், நண்பர்களும் வழங்கி வாழ்த்தினர்.
அவற்றை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்த மணமகன், ஒரு அன்பளிப்பு உறையை பிரித்ததும் திகைத்துப் போனார். அந்த திகைப்பை மறைக்கும் வகையில் சற்று அசட்டுத்தனமாக சிரித்தும் வைத்தார். காரணம், அவரது குறும்புக்கார நண்பர்களில் யாரோ ஒருவர் ஒரு பிரெட் பாக்கெட்டை அழகான காகிதத்தில் பேக்கிங் செய்து அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
சமயோஜிதமாக மணமகனின் அருகில் நின்றிருந்த ஒருவர், ‘பரவாயில்லை நாளை காலை நாஷ்ட்டாவுக்கு (சிற்றுண்டி) உதவும்’ என்று ஜோக்கடிக்க, உண்மையாகவே மணமகன் மனம்விட்டு சிரிக்க தொடங்கினார்.
அந்த காட்சி உங்கள் பார்வைக்கு மட்டும் வீடியோவாக..,
