எப்.முபாரக்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஜே.எம்.லாஹிர் தோப்பூர் பிரதேசத்தில் நீண்டகால குறைபாடாக காணப்படும் ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவை குறித்து சுட்டிக்காட்டியதையடுத்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் தோப்பூர் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்தினை அமைப்பதற்கான ஐம்பது இலட்டம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
