சுலைமான் றாபி-
நிந்தவூரில் இஸ்லாமிய நெறிமுறைகளோடு இயங்கிவரும் CRC முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விருது வழங்குதலும், மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வும் நேற்று (04) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும், ஆசிரியருமான மௌலவி எம்.எச்.றியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம். பாயிஸ் உள்ளிட்ட அதிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் CRC முன்பள்ளி பாடசாலையானது இஸ்லாமிய நெறி முறைகளுடன் கூடிய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவதோடு, இன்று இடம்பெற்ற அனைத்து கலாச்சார நிகழ்வுகளும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வின் இறுதியில் இம் முன்பள்ளி பாடசாலையில் பயின்ற சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும், விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.




