எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேசத்தில் நூளம்புகள் பெருகும் மற்றும் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுவதற்கு ஒன்றுபடுவோம் எனும் நோக்கில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று (4) மத்தியமுகாம் பிரதேசத்தில் ஆராம்பித்து வைக்கப்பட்டது.
இதனை நாவிதன்வெளி பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சவளக்கடை, மத்தியமுகாம், சம்மாந்துறை பொலிஸ் நிலையங்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டி, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு நூளம்பு பரவக்குடிய இடங்கள் இனங்கண்டு சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



