கிழக்கில் தொடரும் ஹஜ் விடுமுறை சர்ச்சை...!

எஸ்.அஷ்ரப்கான்-
ஜ் யாத்திரைக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல, சம்பளமற்ற விடுமுறை கோரும் அதிபர் ஆசிரியர்களுக்கு, அவ்விடுமுறையை அனுமதிக்க, தாபன விதிக் கோவைக்கு முரணாக, விடுமுறை கோரப்படும் நாட்களின் அளவு, சேமித்த பிணி விடுமுறை கோரும், நாட்டில் வேறெந்த மாகாணத்திலும் இல்லாத விதிகளை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சர்வாதிகாரப் போக்கில் தன்னிச்சையாக அமுல் படுத்தியிருந்தார்.

இதனால், போதிய சேமித்த பிணி விடுமுறை இல்லாத, கிழக்கு மாகாணப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு, தமக்கு விதியான ஹஜ் கடமையை, சம்பளமற்ற விடுமுறையில் நாட்டுக்கு வெளியே சென்று நிறைவேற்ற முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறு போதிய பிணி விடுமுறையின்றிச் சென்றவர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டும் வருகின்றனர்.

தாபன விதிக் கோவையின் அத்தியாயம் 23:1 மற்றும் 23:2 உபவிதிகளுக்கு முற்றிலும் முரணாக, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஜீ/ஈபிசி/எ/அனுமதி ஆம் இலக்க 2010.03.31ஆம் திகதிய கடித்தின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்டுவரும் இந்த முரண்பட்ட விதிகள், இன்றும் அமுலில் உள்ளதால், அதன் பாதிப்புக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் தொடர்ந்ததை, மைத்ரியின் நல்லாட்சியிலும் தொடர அனுமதிக்க முடியாது. ஹஜ் விடுமுறை சர்ச்சைக்கு விரைவில் தீர்வு வேண்டும். ஆதலால் குறித்த திகதிய முரண்பட்ட விதிகள் முற்றாக நீக்கப்படல் வேண்டும். பதிலாக தாபன விதிக்கோவையின் குறித்த உபவிதிகள் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வேண்டும்.

முதலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர், முதலமைச்சரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, அதனை அமுலாக்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களுக்கான அறிக்கையை கல்விச் செயலாளரூடாக, மாகாணக் கல்விப்பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

இந்த மகஜர், அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும், மாகாண சுகாதார அமைச்சரினதும் முன்னிலையில், முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் மன்சூர் அனஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -