மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு..!

இக்பால் அலி-
றகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் சமீபகாலமாக நாட்டில் நிலவும் சீரற்ற காரணமாக கன மழையில் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தில் கரம்பை, இஸ்மாயீல் புரத்தில் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களுக்கும் மற்றும் திருகோணமலை புல்மோட்டைய மட்டக்களப்பு வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதியிலுள்ள குடும்பங்களுக்கும் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை 05 -12-2015 அன்று புத்தளம் கரம்பை மற்றும் இஸ்மாயில் புரத்திலுள்ள பள்ளிவாசல்களிலும் 07-12-2015 திங்கட் கிழமை அன்று திருகோணமலை புல்மோட்டையில் அரபா நகர் பாடசாலையிலும் 09-12-2015 நேற்று புதன் கிழமை; மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிறைஞ் துறைச் சேனை அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின பொதுச் செயலாளர் ஏ.எல் கலிலுர்ரஹ்மான் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இதில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் அதிகாரி எஸ்.ஏ.ரியாஸ், காலாசார உத்தியோகஸ்தர் அஷ்ஷெய்க் பீர்முஹம்மது, புல்மோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் ஆலோசகர் அஷ்ஷெய்க் நதீர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர்களுடன் புத்தளத்தில் அஷ்ஷெய்க் ரயீசுதீன், அஷ்ஷெய்க் தௌபீக் மதனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆரசி. பால்மா, கோதுமை மா, சீனி . சவர்காரம, தேயிலை, டின் மீன் உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை புல்மோட்டை அரபா நகரிலுள்ள 352 குடும்பங்களுக்கும் புத்தளம் மாவட்டத்தில் வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் கரம்பை மற்றும் ஆறாம் கட்டை இஸ்மாயீல் புரத்தில் வாழும் 850 குடும்பங்களுக்கும் வாழைச்சேனையில் பிறைஞ்துறைச் சேனை மற்றும் மீராவோடைப் பகுதியில் வாழும் 600 மீனவக் குடும்பங்களுகும் இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. தலா ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2000 பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -