உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்னையம் சம்மந்தமான சர்வகட்சி மாநாடு..!

ஐ.ஏ.காதிர்கான்-
ள்ளுராட்சி வட்டார எல்லை நிர்னையம் சம்மந்தமான கருத்துக்களை அறியும் பொருட்டு அமைச்சரவையினால் வேண்டிக்கொள்ளப்பட்டதற்கு இணங்க இந்த மாநாடு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக பதிவு செய்யபட்டுள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாநாடு 2015 டிசம்பர் 11ம் திகதி காலை 9.30க்கு பத்தரமுல்ல தலவத்துகொட கிரேன் மொனார்சி மன்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றது. 

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் ஆர் சம்பந்தன். சபாநாயகர் கரு ஜயசூரிய, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல் கமிசன் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள், உள்ளூராட்சி மாகாண சபை அமச்சின் செயலாளர் கமல் பத்மசிரி உட்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

2012 இலக்கம் 22 என்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்தத்தின் படி எல்லை பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. 

இந்தக்குழுவின் செயற்பாடு என்பது இது பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகும். அதன் படி நவம்பர் 1ந்திகதியிலிருந்து 30ந்திகதி வரை கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் தமது முறைப்பாடுகளை முன் வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. 

இதன் படி 500க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதன்படி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவினால் முறைப்பாடுகள் இது வரை ஆராயப்பட்டுள்ளதுடன் 2016 ஜனவரி 15ந்திகதி இம்முறைப்பாட்டு ஆய்வு அறிக்கை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும்.

இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் எல்லை நிர்ணய முறைப்பாடுகள் சம்பந்தமான அறிக்கைகள் ஆராயப்பட்டு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களால் மீண்டும் இது பற்றிய வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்படும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -