வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மகிந்தையின் சாரதி கைது..? சீசீடிவி கமராவில் அடையாளம்

முன்னாள் றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

சீசீடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாஜூதீன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீடிவி கமராவின் படங்கள் கிடைத்துள்ளன.

இவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ வீரர் உட்பட இதன் பின்னர் பலர் இந்த மரணம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளனர்.

குறித்த சாரதி தற்போது திருகோணமலை இராணுவ முகாமில் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -