சவூதி அரோபியாவிற்கு பணிக்காக சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமான பெண் ஒருவரின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அவிசாவளை – புவக்பிட்டி – ப்ரகதிபுர பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய கனேஷலிங்கம் கிருஷாந்தி என்ற யுவதியின் மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சவூதி அரோபியாவிற்கு பணிக்காக சென்றுள்ளார்.
கடந்த மே மாதம் நாட்டிற்கு வருகை தருவதாக கிருஷாந்தியால் அவரது தாயிடம் கூறப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கிருஷாந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர் பணியாற்றிய தொழில் முகவர் நிலைய அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 6 மாதங்களின் பின்னரே அவரது சடலம் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
