முக்கிய பரீட்சைகள் செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிப்பது ஏன்..? புத்திக்க பத்திரண எம்.பி விளக்கம்

ல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்-

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (08) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 6,64,537 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் தோற்றவுள்ளனர். இவர்களில் 4,03,442 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2,61,095 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இவர்கள் நாடளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவர்.

இவர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அதிகளவிலான பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்திக்க பத்திரண எம்.பி விளக்கம்-

நாட்டின் முக்கியமான பரீட்சைகள் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண விளக்கியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் ஆகிய பரீட்சைகள் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகின்றன.

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் பரீட்சை நடத்தப்படுவதில்லை. திங்கட்கிழமை ராகு காலம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே செவ்வாய்க்கிழமைகளில் தேசிய பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து பரீட்சைகள் ஆணையாளரிடம் நான் வினவியிருந்தேன்.

பொதுவாக திங்கட்கிழமைகளில் காலை 7.30 முதல் 9.30 வரையில் ராகு காலம் காணப்படும்.

இதனால் பரீட்சைகளை திங்கட்கிழமைகளில் தொடங்க வேண்டாம் என பெற்றோர் தம்மிடம் கோருகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எனக்கு விளக்கம் அளித்தார்.

எமது காலத்தைப் போன்று அல்ல தற்போது பரீட்சைகள் ஆணையாளருக்கும் பெற்றோரின் அழுத்தங்களுக்கு அடி பணிய நேரிட்டுள்ளது.

நவீன உலகம் என்றாலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என புத்திக்க பத்திரண நாடாளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -