2016ஆம் ஆண்டுக்கான தேசிய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான வரி அறவீடு அதிகரித்துள்ளது. அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிற்துறையை பாதுகாக்கும் முகமாக எதிர்காலத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புக்களின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளன பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன ; இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பேக்கரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக தேசத்தை கட்டியெழுப்பும் வரியானது பாண் இறாத்தலொன்றுக்கு 4 சதவீதமும் ஏனைய பேக்கரி தயாரிப்புக்களுக்கு 16 சதவீதமும் வரி செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் வரியினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விலை அதிகரிப்பை தவிர வேறு வழியில்லை எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
