ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரப் கான்-
திவிநெகும உதவி பெறுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ், தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை (03) கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
68 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 06 குடும்பம்களுக்கு வழங்கப்பட்டன.
திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்யின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனி தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
