பொகவந்தலாவையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!

க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் 14 வயதுடைய விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டுள்ள சம்பவம் 10.12.2015 இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி 10.12.2015 இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -