பொத்துவில் அரபிக்கல்லூரி மாணவன் இஸ்காக் நிஸ்ரின் என்பவரை காணவில்லை..!

எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் வை.எம்.வீதியைச்சேர்ந்த இஸ்காக் நிஸ்ரின் (18 வயது) என்பவரை கடந்த 11 மாதம் 29 ம் திகதியில் இருந்து காணவில்லை என குறித்த நபரின் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி தெரியவருவதாவது: 

காணாமல் சென்ற இஸ்காக் நிஸ்ரின் பொத்துவில் சபீலுர்ரசாத் அரபிக்கல்லூரியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த நவம்பர் 24 ம் திகதி பொத்துவில் சபிலுர் ரசாத் அரபிக்கல்லூரியில் இருந்து வீடுவந்தவர் மீண்டும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரபிக்கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர்தான் அதன்பிறகு குறித்த நபர் பற்றிய செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை. 

இது பற்றி பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நபர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 0768486337, 0778999131, 0770562766 ஆகிய தொலைபேசிகள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

காணாமல் சென்ற மகன் செய்தியறிந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற குறித்த நபரின் தாய் வீடு திரும்பியுள்ளார். தனது மகனை கண்டறிந்தவர்கள் உடன் அறிவுக்குமாறு கண்ணீருடன் புலம்பி அழுகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -