விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளராக கல்முனை பைரோஸ் நியமனம்..!

எஸ்.அஷ்ரப்கான்-
சென்றல் கேம்பை பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட வாஹாப்தீன் பைரோஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் இணைப்புச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வாஹாப்தீன், எம்.ஐ.கதிஜா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வரான இவர் சென்றல்கேம்ப் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியினையும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர் கல்வியினையும் கற்றுக் கொண்டார். 

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞான (ஆங்கில மொழி) பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளதுடன், பொது நிர்வாகம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம், ஆங்கிலம், சிங்களம் போன்ற துறைகளில் டிப்ளோமா பட்டங்களையும் நிறைவு செய்துள்ளதுடன் சமூக சேவைகளில் அதிக அக்கறை கொண்டு செயலாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -