முஸ்லிம் சமூகத்தை சரியான முறையில் வழி நடாத்திச் செல்வது உலமாக்களினது கடமை..!

 ஐ.ஏ.காதிர் கான்-
ம்பஹா மாவட்ட உலமாக்களின் ஒன்று கூடல், மாவட்ட ஜம் - இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.லாபிர் தலைமையில், பேலியகொடை - பைதுல் முகர்றமா ஜும்ஆப் பள்ளி வாசலில் இடம்பெற்றது. 

மினுவாங்கொடை, நீர்கொழும்பு, வத்தளை, திஹாரிய, கஹட்டோவிட்ட, பஸ்யால, மல்வானை ஆகிய ஏழு கிளைகளின் அங்கத்தவர்கள் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர்.

மேற்படி ஒன்று கூடலில், தேசிய பிறைக் குழுவின் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் உள்ளிட்ட அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும் பங்கு கொண்டனர். மாவட்ட வலயக் கிளைகளுக்கான 2016 புதிய அங்கத்தவர்களினது தெரிவும் இதன்போது இடம்பெற்றது. 

ஜம் - இய்யாவின் சகல நடவடிக்கைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவதும், இச் செயற்பாட்டுடனேயே முஸ்லிம் சமூகத்தை சரியான முறையில் வழி நடாத்திச் செல்வதும், சகல உலமாக்களினதும் மிகப் பொறுப்பு வாய்ந்த பணியாகும் என, அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தெரிவித்தார். 

வெலேகொட - இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் நுஃமான் (இன் ஆமி) யின் சிறப்புரையுடன் மேலும் பல உலமாக்கள் கருத்துத் தெரிவித்த இந்த ஒன்று கூடல் நிகழ்வில், அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தொடர்ந்தும் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது, 

ஜம் இய்யாவின் ஒவ்வொரு பணிகளும் மக்களுக்கு உரிய நேரத்தில், உரிய முறையில் போய்ச் சேரவேண்டும். ஏனைய மதத்தவர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி சரியான தெளிவை வழங்க வேண்டும். அல்லாஹ் தந்த மார்க்கத்தை அழகாக பின்பற்ற வேண்டும். நபிகளாரின் ஆயிரக்கணக்கான அஹ்லாக்குடைய குணங்களையும் நாம் காண்கின்றோம். அந்தக் குணங்கள் நம்மிடமும் வரவேண்டும். அதை சரியாகவும் முறையாகவும் பின்பற்ற வேண்டும். 

ஒருவர் மற்றவர்களுடைய குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. வேற்றுமையிலும் ஒற்றுமை தேவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். ஜம் - இய்யாவின் பணிகளிலும் அதன் முக்கிய பொறுப்புக்களிலும்; நாம் கண்ணும் கருத்துமாக நின்று, புரிந்துணர்வுடனும் கலந்துரையாடல்களுடனும் செயற்பட முன்வர வேண்டும். இதற்கு சகல உலமாக்களினதும் ஒத்துழைப்பும், ஆதரவும் அவசியம் எனக் குறிப்பிட்டார். 

முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வரும் இவ்வேளையில், உலமாக்கள் ஒன்றினைந்து செயலாற்றுவது தார்மீகக் கடமையாகும் என, கம்பஹா மாவட்ட பொதுச் செயலாளர் மௌலவி ஏ.எச்.எம்.நுஸ்ரான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -