விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில்,
தான் குற்றம் செய்யவில்லை எனவும், தான் குற்றம் செய்யாதவன் என என்றாவது ஒரு நாள் உண்மை வெளிவரும் எனவும் தன்னிடம் தெரிவித்தாகவும், நீதிமன்றத்தினூடாக நான் விரைவில் வெளியில் வருவேன் என அவர் தன்னிடம் கூறியதாகவும், இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனையும் தாம் பார்வையிட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.