அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்கான அரபுக் கல்லூரி..!

ஐ.ஏ.காதிர் கான்-
ரண்டு வருட காலமாக மினுவாங்கொடையில் இயங்கி வருகின்ற கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பிரிவுகளில் மற்றுமொரு பிரிவாக பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்று திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இலங்கையில் முதலாவதாக விஞ்ஞானப் பாடத் திட்டத்தை உள்ளடக்கிய நான்கு வருடங்களைக் கொண்ட மௌலவியா பாடத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் முடிவில், அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வருட முற் பகுதியில் பெண்களுக்கான அரபுக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் ஜமா - அத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா உடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளது. 

இது தொடர்பான நான்கு வருட பாடத் திட்டத்திற்கு அமைவான பாடத் திட்டங்கள், முஹம்மதியாவின் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான், கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.முஹமட் முனாஸிக்கிடம் அதன் தலைமையகத்தில் (06) ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கிவைப்பதைப் படத்தில் காணலாம். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -