விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய மர்ம நபர்.!

வெளிநாட்டு பயணத்தின் பின் நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவிருந்த முக்கியஸ்தர்களுக்கான வழியில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரின் காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லி மீற்றர் பிஸ்டலொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்திக்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் அக்காலப்பகுதியிலேயே இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அக்காலப்பகுதியில் நபரொருவர் துப்பாக்கியுடன் இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த நபர், பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவரை விடுவிக்குமாறும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அழுத்தம் பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி வரும் வேளையில் ஆயுதத்துடன் நபரொருவர் இருந்தமை, சாதாரண விடயமல்லவெனக் கூறி விமானநிலைய பாதுகாப்பு பிரிவினர் அதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -