காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி மட்/மம/ பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் செயற்பாடுகள் அபிவிருத்தி அடைய வேண்டும் அதன் மூலம் பாடசாலையின் நடவடிக்கைகளும் மற்றும் கல்விக் கடமைகளையும் சிறந்த முறையில் செவ்வனே செய்ய முடியும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் பண்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து 120,000.00 ரூபாய் பெறுமதியான போட்டோ கொப்பி மற்றும் பிரின்டர் இயந்திரங்கள் காத்தான்குடி மட்/மம/பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு வெள்ளிக்கிழமை 04.12.2015 அன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி மட்/மம/ பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்க்கு போட்டோ கொப்பி மற்றும் பிரின்டர் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து சிறப்பபித்து மேற்கண்டவாறு கூறினார்கள்,

மேலும் தனது உரையில் இப்பாடசாலையானது ஐந்தாம் ஆண்டு வரையுள்ள வளர்ந்துவரும் பெண் மாணவர்களுக்காண பாடசாலையாகும். மிகவும் நேர்த்தியாக மாணவர்களை பக்குவபடுத்தும் பாடசாலை நல்ல வளங்களை கொண்ட பாடசாலையாக மாற வேண்டும் என்பதில் எவ்வித கருத்து முரண்படும் கிடையாது. 

நான் மாத்திரமின்றி ஊரில் உள்ள அரசியல் தலைமைகள், சமூக நலன் விரும்பிகள் இப்பாடசாலை அமைந்திருக்கும் இடம் பொருத்தமான இடமில்லை என்று எல்லோரும் கவலைபடுகின்ற ஒன்றாகும்.

இன்ஷாஅல்லாஹ் 2016 ம் ஆண்டின் மாகாணசபை நிதியிலிருந்து இப்பாடசாலையினை அபிவிருத்தி செய்வதற்காக 40 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

இன்ஷாஅல்லாஹ் இந்த நிதியினை இன்று முதலமைச்சரோடு கலந்தாலோசித்து 70 இலட்சமாக மாற்றுவதற்கு தீர்மானித்து இருக்கின்றோம். பாடசாலை இருக்கின்ற அந்த இடத்திளிருந்து மிகவும் சிறந்ததோர் இடத்திற்கு மாற்றப்பட்டு இந்த பிள்ளைகள் நல்லதோர் சூழலில் கல்வி கற்கக்கூடிய ஓர் நிலைமையை உருவாக்க வேண்டுமென நாங்கள் ஆசைப்படுகின்றோம்.

இருந்தாலும் அது கால ஓட்டத்தில் பிள்ளைகளுடைய சேர்வு எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது அது பாடசாலையினுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை
அதிகரிக்கின்ற போது அந்தப் பிள்ளைகளினுடைய சுகாதார ரீதியாக, பிள்ளகளினுடைய பாதுகாப்பு ரீதியாக நாங்கள் உற்று நோக்குகின்ற போது தற்போது அமைந்திருக்கின்ற இடம் இந்தப் பிள்ளைகளுக்கு பாரிய சவாலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. 

இன்ஷா அல்லாஹ் இந்தப்பாடசாலை நல்லதோர் சுற்று வட்டாரத்திற்குள் மாற்றப்பட்டு புதியதோர் கட்டித்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க இருக்கின்றோம்.

அண்மைக் காலமாகத்தான் எமது ஊரிலிருந்து ஓர் கணிசமான அளவு நாங்கள்
சந்தோசப்படுவதட்கல்ல கடந்த காலங்களை விட தற்போது ஐந்து அல்லது ஆறு வருடங்கலாகத்தான் பல்கலைக் கழகத்திட்கு மருத்துவத்துறைக்கு, பொறியியல்துறைக்கு, அல்லது வேறு துறைகளுக்கு பல்கலை கழகங்கம் செல்வதற்குரிய பிள்ளைகள் அதிகரித்துள்ளார்கள் அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகள் தான் மிக அதிகமாக பல்கலைக் கழகங்களுக்கு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். 

கடந்த ஆண்டிற்கு முந்திய ஆண்டு பத்து பிள்ளைகள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் அதில் ஒருவர் மாத்திரம் தான் ஆண்பிள்ளை, மற்ற ஒன்பதுபேரும் பெண்பிள்ளைகள் அல்ஹம்துலில்லாஹ்.

ஏனென்றால் எங்களுடைய ஊரில் மிக அதிகமான தேவை இருக்கின்றது பெண் வைத்தியர்கள், ஆண் வைத்தியர்கள் அதே போன்று பொறியியலாளர்கள் பெண் பொறியியலாளர்கள் என அதிகமான தேவைப்பாடுகள் எங்களுக்கிருக்கின்றது. ஆகவே எங்களது கல்விச்சமூகம் சிறந்த முறையில் வீறுநடை போட வேண்டுமாக இருந்தால் ஆரம்பக்கல்வி கொடுக்கப்படுகின்ற அந்த இடங்கள் சரியான முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் அதிபர் அவர்கள் இந்தப்பாடசாலை சம்பந்தமான விடயங்களில் மிகக்கூடிய அக்கறை செலுத்துகின்ற ஒருவர்.

எங்களுடைய முதல் கட்ட உதவியாக இன்று போட்டோ கொப்பி இயந்திரத்தை கையளித்து இருக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இந்தப் பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்கள், ஆளணி வளங்கள் என்பனவற்றை நாங்கள் வளப்படுத்திக் கொடுப்போம்.

அதே போன்று அதிபர் அவர்களினால் மிக நீண்ட காலமாக கேட்கின்ற ஓர் விடயம் காவலாளி ஒருவரை இப் பாடசாலைக்கு தரவேண்டும் என்று அதையும் நாம் பெற்றுத்தருவதட்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த பாடசாலையினுடைய எல்லா அபிவிருத்தி பணிகளிலும் நாங்கள் கைகோர்த்து நின்று இதனை உயர்த்துவதோடு மிகப்பாரிய பொறுப்பு இங்கு வந்திருக்கின்ற பெற்றோர்களுக்கு இருக்கின்றது.

இந்தப்பாடசாலையை வளப்படுத்துகின்றது என்கின்ற விடயம் வெறுமனே பாடசாலையில் போதிக்கின்ற ஆசிரியர்களால் அல்லது இங்கு இருக்கின்ற அபிவிருத்தி குழுவினால் இதனை செய்ய முடியாது. நிச்சயமாக உங்களுடைய பங்களிப்பும் அதில் இருக்க வேண்டும்.

இந்தப்பாடசாலை உருவாகி மிகக்குறுகிய நான்கு வருட காலத்திற்குள் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறதென்றால் முக்கியமாக பெற்றோர்களும் அதற்கு பாரிய பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆகவே மேலும் இப்பாடசாலை அபிவிருத்தியடைய தங்களுடைய பங்களிப்பினை வழங்கி, பிராத்தனை செய்யுமாறும் தனது உரையில் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -