வில்பத்து - கூட்டுப் பொறுப்பை உணர்வோம்!

டந்த 28ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'சலகுன' அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் சமூக வளைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டு வந்துள்ளமையை நான் சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை.

குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மாத்தறை ஆனந்த தேரர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வில்பத்துவில் சட்டவிரோதக் குடியேற்றங்கள், வில்பத்து வனம் சட்டவிரோதமான அழிக்கப்படுகின்றன, வில்பத்தவில் இருந்து அமைச்சர் ரிசாத் குடு வியாபாரம் செய்கிறார்... இந்தக் குற்றச்சாட்டுக்கள்தான் குறித்த விவாதம் இடம்பெறக் காரணமாகும்.

ஆனால் அன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விவாதத்தில் மேற்குறிப்பிட்ட அல்லது ஆனந்த தேரரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா? அது முழுமையான திருப்தியைக் கொடுத்திருக்கிறதா .... இதுபோன்ற பல கேள்விகள் மனதில் எழுக்கின்றன.

குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் முஸ்லிம்கள் மீதான இனவாதம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

குறித்த விவாதத்தில் குற்றச் சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குறுக்கீடு, ஆனந்த தேரருக்கு ஒதுக்கப்பட்ட நேரம், குறுக்கீடு இல்லாமல் தேரரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த தொகுப்பாளர்கள் என்று அந்த நிகழ்ச்சியை பார்த்த நீங்கள் அங்கு இனவாதம் எப்படி தலைதூக்கியிருந்தது என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள்.

எனினும் அமைச்சர் ரிசாத் குற்றஞ்சாட்டப்பட்டவன் நான். எனக்கு சந்தர்ப்பம தாருங்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடம் நேரத்தை கேட்டு கிடைத்த நேரத்திற்குள் விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக தனது பக்க நியாயங்களை அதுவும் சிங்கள மொழி மூலம் முன்வைத்தமை எல்லோரினதும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.

எனினும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் 'குடு' வியாபாரம் செய்கிறார் என்று ஆனந்த தேரர் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கொஞ்சம்கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

அதுபற்றி இடைக்கிடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், தேரரிடம் ஞாபகப்படுத்தி போதிலும் தேரர் பதில் கொடுப்பதாகக் கூறி இறுதிவரை மழுப்பிக் கொண்டேயருந்தார். நிகழ்ச்சிpத் தொகுப்பாளர்கள் கூட அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் இன்னுமொரு விளக்கம் அல்லது விவாதம் தேவைதானா என்ற கேள்விக்குப் அப்பால், அமைச்சர் மீது ஆனந்த தேரரினால் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை அல்லது முஸ்லிம்கள் காட்டை அழிப்பவர்கள், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்று ஆந்த தேரரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் சிங்கள சமூகங்கள் மத்தியில் அவை உண்மையாக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினால்;தான் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறித்த கலந்துiராடலில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீது இனவாதக்கருத்துக்கள் சொல்லப்பட்டது இது ஒன்றும் புதிய வியடமல்ல. இதற்கு முன்னரும் முஸ்லிம்கள் இனவாதிகள், மதவாதிகள், தீவிரவாதிகள் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எஎம். அஷ்ரப் அப்போது கப்பல்துறை, துறைமுகங்கள், பனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது ரி.என்.எல். தொலைக்காட்சியில்'நென பகன' எனும் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

அந்த கலந்துரையாடலில் கங்கொட சோம ஹிமி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எஎம். அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலந்துகொண்டிருந்த பௌத்த மதகுரு நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் முடியும் வரை இனவாதக்கருத்துக்களையே சொல்லி வந்தார். அத்துடன், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் தொடர்பில்லாத பல கேள்விகளையும் கேட்டுக்கொண்டே இரந்தார்.
ஆனால், அந்த கேள்விகளுக்கு பொருத்தமான மற்றும் மிகத் தெளிவான விளக்கங்களை மர்ஹூம் அஷ்ரப் கொடுத்திருந்தார்.

எனது சமூகத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது எனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்களில் மாத்திரம் ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். அதற்கு என்னால் பதில் தரமுடியாது என்று முக்தில் அரைந்தது மாதிரி மர்ஹூம் அஷ்ரப் குறித்த தேரரிடம் கூறியிருந்தார்.

குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் மிகவும் அமைதியானவராக இருந்துகொண்டு இரு தரப்பினருக்கும் சுதந்திரமாக பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். இந்தக் கலந்துரையாடலை பார்த்திருந்தால் மர்ஹூம் அஷ்ரபின் கம்பீரமான பேச்சை நீங்களே பார்த்து புரிந்துகொண்டிருப்பீர்கள். இது பத்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இனவாதமாகும்.

ஆனால், ஹிரு தொலைக்காட்சியின் 'சலகுன' அரசியல் கலந்துரையாடல் நிகழ்சியியை பார்வையிட்ட உங்களுக்கு அதுபற்றி புரிந்துகொள்ள அவ்வளவு நேரம் எடுக்காது என நம்புகிறேன்.

தேரருடன் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து அமைச்சர் ரிசாத் பதியுதீனை சங்கட நிலைக்கு உட்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுக்க அதற்கு மிகத் தைரியமாக கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காமல் தன் மீதும், தனது சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்கு ஆதரபூர்வமாக ஆவணங்களை காண்பித்து வாயை அடைத்திருந்தார்.

வில்பத்து வன பிரதேசத்தை அழிக்கவில்லை, அங்கு எந்தக் குடும்பங்களும் சட்டவிரோதமாகக் குடியேற்றவில்லை என்றும் அவ்வாறு சட்டத்திற்கு முரணாக ஏதும் இடம்பெற்றிருந்தால் சட்டரீதியாக அணுகுமாறும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயத்தில் 'ஹிரு' தொலைக்காட்சி கூட நடுநிலை வகிக்கவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை வில்பத்து ஒரு பிரச்சினையே. ஆதனை உரியவர்கள் தலையிட்டு தீர்க்கவில்லையென்றால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்ற தொனியிலேயே நிகழ்ச்சித் தொகுப்பார்களினால் பேசப்பட்டு வந்தது.

அதுமாத்திரமின்றி, மறுநாள் ஹிரு இணையத்தளத்தில் வில்பத்து விவகாரம்;, குர்ஆன் மீது சத்தியம் செய்ய மறுந்த அமைச்சர் ரிசாத் என்று தலைப்பிடப்பட்ட ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது.

இந்த செய்தியும் ஹிருவின் இனவாதத்தையே காட்டி நிற்கிறது. உண்மையில், 28ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் குர்ஆன் மீது சத்தியம் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லுங்கள் என்று தேரருக்கு ஆலோசனை வழங்கியது யார்? ஏன்றொல்லாம் கேள்விகள் எழுகின்றன.

இரவுவு 10மணிக்கு ஆரம்பித்த கடும் விவாதம் 29ஆம் திகதி 1.30 மணியையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடியும் நேரத்தில்தான் ஆனந்த தேரர் மேசைக்கு கீழ் இருந்து குர்ஆனை எடுத்து சத்தியம் செய்யச் சொல்லி அமைச்சரிடம் நீட்டினார். அப்படி குர்ஆன் மீது சத்தியம் செய்தும், ஆனந்த தேரர் தமது மதத்தின் மீதும் சத்தியம் செய்தும் தமது பக்க நியாயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருந்தால் மூன்றரை மணித்தியாலயங்கள் விவாதம் எதற்கு நடத்தியிருக்க வேண்டும்.

எனவே, இதுவும் ஹிரு தொலைக்காட்சியின் ஒரு திட்டமிடப்பட்டதொன்றாகும்.

உண்மையில் வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அல்லது சட்டவிரோத காடழிப்பு என்பன இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் உரிய முறையில் சட்டரீதியாக அணுகி அதுபற்றி பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற வகையில் இனவாதக் கருத்துக்களைச் சொல்லி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இலங்கையில் முஸ்லிம்கள் ஒருபோதும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. மாற்றமாக இனவாதக் காவியுடையணிந்தவர்களின் அவநடத்தையினால்தான் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தலாக இருக்கப் போகிறது என்பதை இந்த நல்லாட்சி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

வில்பத்து விவகாரத்துடன் தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அந்த பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை சொந்த இடத்தில் குடியேற்றுவது இந்த நாட்டில் ஆட்சிபுரிகின்ற அரசுக்கு உள்ள கடமையாகும்.

இந்த பணியை அரசும், அரசாங்கத்தினால் பணிக்கப்பட்ட அரச அதிகாரிகளும்தான் செய்ய வேண்டுமே தவிர, வேறு எவரும் மூக்கை நுளைக்கின்ற அளவுக்கு இடமளிக்க முடியாது.

ஆத்துடன், வில்பத்து விவகாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சொந்தக் காணிப்பிரச்சினையல்ல. அமைச்சரின் சொந்த விடயங்களை அமைச்சர் பார்த்துக்கொள்வார். ஆனால் .து ஒரு சமூகப்பிரச்சினை என்தால் எல்லோரும் தலையிட வேண்டியது கடயமாகும்.

இலங்கையின் அபிவிருத்திக்கு பல அரபு நாடுகள் நிதி உள்ளிட்ட பொருளாதார ரீதியில் உதவி செய்கின்றன. எனினுனும் இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் லட்சணங்கள் பற்றி குறித்த அரபு நாடுகளுக்கு முறையாக சொல்லப்படகின்றனவா என்று பார்த்தால் அது குறைவாகவே காணப்படுகின்றன.

இதுபற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் தலைவர்கள் அரபு நாடுகளுடன் இலங்கை நல்ல உறைவை வைத்துள்ளது என்று சந்தோஷபப்டுகின்ற போதிலும் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறையின்றி, செயற்படுவதும் கவலையை அளிப்பதாகவே அமைகின்றன.

எனவே, இந்த வில்பத்து மற்றும் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் தொடர்பில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புக்கள் , முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேரவேண்டியது கட்டாயக் கடமையாகும்.

இன்று முஸ்லிம்களை எவ்வளவு கேவளப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மிகவும் கீழ்த்தரமாக அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். இதுவிடயத்தில் முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் எம்.பிக்கள் நல்லாட்சி அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வடபுல முஸ்லிம்களின் நிம்மதியாக மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை மற்றும் இனவாதபட பேசடசுகள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர, இவ்வாறு அடிப்படையில் இனவாத சிந்தனையுடன் வெறிபிடித்து திறிகின்றவர்களை அழைத்துக்கொண்டு விவாதம் என்ற பெயரில் காலம், நேரத்தை வீணாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வில்பத்து பிரதேசத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயற்பாடுகள், குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று அரசு மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்படியிருக்கையில், வடபுல முஸ்ல்pம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, அரபு நாடுகளின் நிதியுதவி உள்ளிட்ட வரவு செலவு விபரங்களை ஆனந்த தேரருக்கு எதற்காக சொல்லவேண்டும். அதில் என்ன தேவை இருக்கிறது.

இன்று மாத்தறை ஆனந்த தேரர் கேட்டு வருவார். நூளை பொலநறுவையிலிருந்து இன்னுமொரு தேரர் விவாதத்திற்கு வா என்று அழைப்பார். எனவே எல்லோருக்கும் தனித்தனியாகக் கூப்பிட்டு தெளிவுபடுத்துவதற்கு என்ன தேவை இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் டொலருக்கு அடிமையாகிப் போனவர்கள். மனிதநேயமே இல்லாத இவர்களுடன் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

எனவே, மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம்களின் பூரவீக பூமியை மீட்டெடுபப்தற்கும், வடபுல முஸ்லிம்களின் கௌரவமாக மீள்குடியேற்றத்திற்கும் அரசியல், கட்சி, பிரதேச வேறுபாடுகள் என்பவற்றை களைந்து சமூக உணர்வுடன், எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு அமைய ஒற்றுமை படுவதன் மூலமே நிச்சமாயக வெற்றிபெற முடியும். இதனை இஸ்லாமும் வலியுறுத்திக் கூறுகிறது. புனித இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்துள்ள எம்மிடையே ஒற்றுமையில்லை என்றால் எமது சமூகத்திற்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்காது.

அதுமாத்திரமின்றி, வில்பத்து விவகாரம் மற்றும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை என்பவற்றுக்கு இந்த நல்லாட்சி அரசு நல்ல பதிலை தராது போனால் அரசுடன் அமைச்சர்களாக ஒட்டிக்கொண்டிருப்பதில் அல்லது ஆளும் கட்சி எம்.பிக்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

சமகாலத்தில் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறைப்படியே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட நல்லாட்சி அரசிடமிருந்து இதுவிடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை, உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே. அமைச்சர் ரிசாதுடன் இருக்கின்ற தனிப்பட்ட குரோதங்களுக்காக அவரைப் பழிவாங்குவதாக நினைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் படுகுழிக்குள் வீழ்த்த வேண்டாம் என்பதுதான் கோரிக்கையாகும்.

ரஸீன் ரஸ்மின்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -