பெரிய நீலாவணை அக்பர் முன்பள்ளி சிறார்களின் 'சிட்டுக்கள்' சிறுவர் விழா..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
பெரிய நீலாவணை அக்பர் முன்பள்ளி சிறார்களின் 'சிட்டுக்கள்' சிறுவர் விழாவும், பரிசளிப்பும் வெள்ளிக்கிழமை (11-12-2015) மாலை அக்பர் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது. 

பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.சஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் முன்பள்ளிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிபபாளர் ஏ.எல்.சக்காப் கலந்து கொண்டார்.

அவர் இங்கு உரையாற்றுகையில்:-

பிள்ளைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான பருவமாகும் இந்தப் பருவத்திவத்தில் பிள்ளைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.இந்த சிறு பருவத்தில் பிள்ளைகளின் மூளைவளர்ச்சி என்பது வீதமாக வளர்ச்சியடைவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தாய் ஒரு குழந்தையை எப்போது கருவறையில் உற்பத்தி செய்கின்றாறோ அன்றில் இருந்து ஐந்து வயது வரை உள்ள பருவம் ஆரம்பப் பிள்ளைப் பருவம் என வரையறுத்திருக்கின்றார்கள் இந்த ஆரம்ப பிள்ளைப் பருவத்தை தாய்மார் ஏனோ தானோ என்று நினைத்து விட வேண்டாம்.

இந்த வயதில் எண்பது விதமான மூளைக்கலங்கள் விருத்தியடைகின்ற காலம் இதுவாகும் இந்தக்காலத்தில் ஒரு குழந்தை எதிர்காலத்தில் யாராக வரவேண்டும் என்று விரும்புகின்றதோ அதைத்தீர்மாணிக்கின்ற காலம் இதுவாம் என்று உளவியலாளர்களும்;,ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றார்கள். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த பருவம் இந்த பிள்ளைப்பருவமாகும்.

ஆகவே இந்த பிள்ளைப் பருவத்த்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எந்த அளவு அக்கறை செலுத்துகின்றார்களோ அந்த அளவுக்கு அவர்கள் எதிர்பார்க்கின்ற குழந்தையாக அந்தக் குழந்தை பரினமிக்கும் என்பதில் சந்தேமில்லை.இந்த வயதுப் பிள்ளைகளிடம் அற்புதங்களும், அதிசயங்களும், நிறைந்த கிடக்கிறது. இதை வெளிக்காட்டுவதற்குரிய உந்து சக்திகளையும், வழிகாட்டல்களையும் பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், சிறப்பு அதிதிகளாக அமைப்பின் ஆலோசகர்களான வை.எல்.எம்.அன்ஸார், ஐ.எல்.எம்.பாறூக், விவாகப்பதிவாளர் எம்.எம்.உதுமாலெப்பை, அக்பர் வித்தியாலய அதிபர் ஏ.எம்.ஜிப்ரி, கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.நஸ்மி, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சரிபா சாஜகான், திவிநெகும உத்தியோகத்தர் ஏ.கமால்தீன், அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ஜிபான். ஏ.சி.எம்.தௌபீக்; ஆகியோருடன் அமைப்பின் உறுப்பினர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகள் மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும், சாண்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர். ஏ.என்.எம்.நாஸீக், எம்.ஐ.எம்.நிலாம் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -