சுலைமான் றாபி-
சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பணிப்புரையின் கீழ் சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "இலவச கண்புரை அறுவை சிகிச்சை" (Cataract Surgery) அம்பாறை, கல்முனை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் மிக விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளவுள்ளோர்கள் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH Office) அலுவலகத்திற்குச் சென்று தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசிம் பொது மக்களைக் கேட்டுள்ளார்.
