சுலைமான் றாபி-
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கான புதிய விளையாட்டு உத்தியோகத்தராக முஹம்மட் ஹாசிம் முஹம்மட் அஸ்வத் நாளை (28) முதல் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஹாசிம், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றுச் சென்ற எஸ்.எல். தாஜுதீனின் இடத்திற்கே இவர் பதில்கடமைக்காக நாளை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நாளைமுதல் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக கடமைப் பொறுப்பேற்கும் இவர் கடந்த 2008ம் ஆண்டு இந்த சேவைக்கு உள்வாங்கப்பட்டதோடு, சிறந்த விளையாட்டு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.
