சாய்ந்தமருது அஷ்பால் அல் குர்ஆன் அகடமியின் ஓராண்டு பூர்த்தி விழாவும் கலை நிகழ்ச்சியும் 2015-12-13ஞாயிற்றுக்கிழமை கமு/கமு/றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய கேட்போர் கூடத்தில், அஷ்பால் அல் குர்ஆன் அகடமியின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இறக்காமம் பகுதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.எம்.றஸீன் கலந்து மாணவ மாணவிகளுக்கு பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.
கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார் கமு/கமு/றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறு மாணவ மாணவிகளின் இஸ்லாமிய வாசம் நிறைந்த கலைநிகழ்வுகள் சபையோரை மகிழவடைய வைத்தது.









