மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளராக கலாநிதி வஸீர் ஹூசைன் நியமனம்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாசார அமைச்சின் கீழ் உள்ள மீழ்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், பணிப்பாளராகவும் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி வஸீர் ஹூசைன் நியமிக்கப்பட்டள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட பணிப்புரைக்கு அமைவாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கலாநிதி வஸீர் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-12-02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இருக்கான நியமனக் கடிதத்தை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2015-12-10ஆம் திகதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் வெஸ்லி பெர்னாண்டோ, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கருணாரட்ன, மற்றும் யாழ். மாவட்ட முன்னாள் செயலாளாளரும், மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமுமான கனேசலிங்கம் அகியோரும் கலந்து கொண்டனர்.

கலாநிதி வஸீர் ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கல்முனைத் தொகுதிக்கான தேர்தல் பணிகளுக்கு பொறுப்பான அமைப்பாளர் ஆவார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -