அனுமதிப்பத்திரமின்றி மருந்தகம் நடத்திய ஒருவர் கைது..!

எப்.முபாரக்-
திருகோணமலை - அநுராதபுர சந்தியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் சுகாதாரத் திணைக்களஅதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையின் போது அனுமதிப்பத்திரமின்றி மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த இலக்சான் ஒத்தாசியஸ் செல்லையா (28) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சுகாதார திணைகள அதிகாரிகளின் உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, காலாவதியான திகதியில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் 'எனொக்ரா' என்றழைக்கப்படும் 40 பெட்டிகளையும் ஊக்கமருந்து 164 பக்கெட்டுக்களையும் கைப்பற்றியதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, இன்று புதன்கிழமை (09) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -