பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் காரியாலயத்தில் நேற்று (4) இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தங்களுக்குரிய உரையை நிகழ்த்த முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்கள தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.
இவர்களது சந்திப்பு தொடர்பில் எந்த ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வரவு செலவுத் திட்டத்தில் தனது கருத்தை வெளியிட்ட பின்னர் வழங்கப்பட்ட பகல் போசன இடைவெளியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பகல் போசன இடைவேளையின் பின்னர் முதலில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனது உரையின் பின்னர் சபையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
