ஐ.எஸ். மாத்திரமல்ல அனைத்து பயங்கரவாதிகளையும் அழிப்பதே எமது இலக்கு – சவுதி இளவரசர்

.எஸ். தீவிரவாதிகள் மாத்திரமல்ல, அனைத்து பயங்கரவாதிகளையும் அழிப்பதே எமது இலக்கு என சவுதியின் இரண்டாம் முடிக்குரிய இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து போராட, சவுதியின் தலைமையில் 34 நாடுகள் கொண்ட சர்வதேச இஸ்லாமிய கூட்டணி உருவாக்கப் பட்டதை அடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரியாத் நகரை தலைமையகமாக கொண்ட சர்வதேச இஸ்லாமிய கூட்டு இராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலும் பல நாடுகளில் பரவலாக காணப்படும் பயங்கரவாத அமைப்புக்களை இல்லாதொழிக்க பாடுபடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சவுதி தலைமையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள சர்வதேச இஸ்லாமிய கூட்டணிக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -