நாவிதன்வெளி பிரதேசத்தில் ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு..!

எம்.எம்.ஜபீர்-
ல்லோயா குடியேற்ற திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவரும் 55 குடும்பங்களுக்கு ரண்பிம காணி உறுதிப்பத்திரம் மற்றும் காணி உத்தரவு பத்திரம் என்பன நேற்று பிரதேச செயலக கோட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அம்பாரை மாவட்ட உதவி காணி ஆணையாளர் ஏ.எல்.ஐ.பாணு, அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் விதார நாணயக்கார, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் எழுதிய பிரதேச செயலகத்தினுடாக பொது மக்கள் அரச சேவையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -