சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைப்பு..!

க.கிஷாந்தன்-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தை 15.12.2015 இன்று கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் 15.12.2015 இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், உபதலைவர் மாரிமுத்து, ஜோதிகண்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விஜயகுமார், உரூத்திரதீபன், தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக இராமநாதன், முருகையா மற்றும் பொருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் சார்பாக 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -