நாடாளுமன்றத்துக்குள் முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சி - பிரதமர் ரணில்


முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, சனிக்கிழமை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

இதன்போது, ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, நேற்று வெள்ளிக்கிழமை ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்;

“முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக, ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்தனர்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான் நாடாளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லிம்களை அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அந்தச் சண்டித்தனத்தை இப்போது, நாடாளுமன்றத்துக்குள் காட்டி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அடிக்க வருகின்றீா்கள்.

இதனை நாம் அனுமதிக்க முடியாது. சகல கட்சித் தலைவா்களையும் கூட்டி இதற்கு முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -