திருகோணமலை குச்சவெளி அந்நூரிய்யாவின் குறைபாடுகள் எப்போது தீரும்...?

எப்.முபாரக்-
திருகோணமலை வலயம் குச்சவெளிக் கோட்டத்திலுள்ள தி அந்நூரியா கனிஸ்ட்ட பாடசாலையின் கட்டிடம் 19ஆம் நூற்றாண்டின் அதாவது 1800களின் இறுதிப் பகுதியில் குச்சவெளி மெதடிஸ்த்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலைக்கென கட்டப்பட்டதாகும். 

1962 ஆம் ஆண்டு அரசு இப்படசாலையைப் பொறுப்பெடுத்த பின்னர் அந்நூரியாவாகப் பெயர் மாற்றம் பெற்றன.

2004 ஆம் ஆண்டு இப்படசாலையானது சுனாமித் தாக்கத்தக்குள்ளான போது சுனாமி புனரமைப்புத்திட்டத்தின் கீழ் பிரதான வீதியல் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து 18.11.2007 இப்பாடசாலை புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டது.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து ஆரம்பபிரிவு 1.6.2014 முதல் தனியானதொரு பாடசாலையாகப்பிரிக்கப்பட்டு தற்பொழுது 300 மாணவர்களுடன் தரம் 1,2.3 வகுப்புடன் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்களுடன் மூன்று தொண்டர் ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றன.

இப்பாடசாலையில் வகுப்பறை, இடப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவுள்ளது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

மிகப்பழைமைவாய்ந்த கட்டிடம் இன்றோ நாளையோ இடிந்து விழும் தருவாயிலுள்ளது. அடிப்படை வசதிகள் பெரிதாக எதுவும் இல்லை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களே இங்கு கல்வி கற்கின்றனர் கடந்த ஒருவருடமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கஸ்ட்டப்பிரதேச மாதாந்தக் கொடுப்பணவு 1500 ரூபா இதுவரை வழங்கப்படவில்லையென புகார் தெரிவக்கப்படுகிறது.

இவ்வாறு பின்தங்கிய பாடசாலையை அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அபவிருத்தியில் உள்வாங்கப்பட வேண்டும் என பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் நளீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -