இக்பால்அலி-
செனட்டர் மசூர் மௌலானாவின் மறைவு எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று முஸ்லிம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முன்னாள் செனட்டர் மசூர் மௌலாவின் மறைவு தொடர்பாக முஸ்லிம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சமூகப் பொது நலன்களின் மீது அதிக அக்கறை கொண்டு இதயசுத்தியுடனும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர். அரசியல் மேடைகளில் சொல்லப்பட வேண்டிய விடயங்களை மிக இலாவமாகவும் நகைச்சுவையாகவும் துணிச்சலுடன் உரையாற்றக் கூடிய வல்லமையும் திறனும் பெற்றவர்.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டு செனட்டராகவும் கல்முனை மாநகர சபையின் முதல்வராகவும் என பல உயர் பதவிகைள வகித்தவர்.
கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் எமது நாட்டுத் தலைவர்களின் கட்சியின் பரப்புரைக்காக முன்னிட்டு உழைத்ததோடு மட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதிளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்,பிரேமதாச உள்ளிட்டவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.
அன்னாரது மறைவு எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது மறைவினால் ஆழ்ந்த துயரத்திலுள்ள குடும்பத்தவர்கள் அனைக்கும் அனுதாபத்தைத் தெரிவிப்பிதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்பால் அலி
