மாற்றமடையும் ஆடை கலாச்சாரமும் அதிகரிக்கும் சமூக சீரழிவுகளும்..!

னிதன் என்பவனை வளர்ச்சியடைந்த ஒரு மிருகம் என்றே கூறலாம், மனித இனத்தின் ஆரம்ப காலத்தில் மனிதனும் மிருகங்களைப்போன்றே வாழ்ந்து வந்தான்.

அதாவது உணவு, உடை, உறையுள் போன்ற பலதரப்பட்ட அம்சங்களிலும், அந்த காலகட்டத்தில் அனைவருமே நிர்வாணமாகவே வாழ்ந்துள்ளனர் என்பதை வரலாறுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

அக்காலத்தில் மனிதனுக்கு நிர்வாணமாய் இருப்பது இயல்பு (மிருகங்களைப்போல்) என்பதால் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பின்னர் காலம் செல்ல செல்ல மனிதன் புதியவைகளை சிந்தித்தான், மிருக நடத்தைகளிலிருந்து மாற்றத்தை கொண்டுவர முனைந்தான்.

இதன் விளைவாக இருப்பிடங்களை அமைக்கவும் பேசுவதற்கான மொழிகளை உருவாக்கவும் செயற்பட்டான், உணவுகளை தேடிச்செல்லும் போது காடுகளில் கற்கள், முற்கள் போன்றவை தனக்கு பாதிப்பை வழங்கியது.

அப்போது கால்களை பாதுகாக்க மிருகங்களின் தோல்களையும் உடலை பாதுகாக்க இலை குழைகளையும் பயன்படுத்தினான்.

இதன் பின்னரே காலணி, உடை என்பவை தோற்றம் பெற்றது எனலாம்.. இதுவே பண்டைய காலத்தில் உடை தோற்றம் பெற்ற தருணமாகும்...

இதன் பின்னரே உடலை மறைப்பது ஒரு கடமையாக மாறியது. இவ்வாறு காலம் செல்ல செல்ல ஒவ்வொறு துறையிலும் பல்வேறு வகையான முன்னேற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டது..

அந்த வகையில் ஆடைத்துறையில் அடைந்த முன்னேற்றத்தின் காரணமாக சீலை (துணி) தோற்றம் பெற்றது. இவ்வாறு ஆடைத்தொழிநுட்பம் அபிவிருத்திகளை அடைந்து கொண்டு செல்கையிலே மனிதனுக்கு வெக்கம், கூச்சம் போன்ற உணர்வுகளும் அதிகரித்தது எனலாம்.

ஆடையணியாமல் இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனிதன் தற்போது ஆடையணியாவிட்டால் கேவலமாகவும் வெக்கத்துடனும் பார்க்கத்துடங்கிவிட்டான்..

அத்தோடு வெருமனே சாதாரண உடல் உருப்பாக பார்க்கப்பட்ட சில உருப்புகள் ஆபாச பொருட்களாக பார்க்கப்பட்டன. 

இதனால் முழுமையான உடைகளை அணிந்து தங்கள் உடல்களை ஆண்கள் பெண்கள் என அனைவரும் மறைத்தனர் எனலாம்..

இவ்வாறு காலமும் சென்றது நாகரீகமும் வளர்ச்சியடைந்தது, நவீண ரக ஆடைகளும் தோற்றம் பெற்றது ஆடைத்தொழிநுட்ப வளர்ச்சியினால் பாதுகாக்கப்பட்ட மனிதன் அதே துறையின் மிகையான வளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றான் என்பதே கசப்பான உண்மை இதைத்தான் பெரியோர்கள் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று கூறியுள்ளார்கள் போல..

ஆம் இன்றைய நவீன ஆடைகளின் ஆதிக்கம் வெளிநாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எமது நாட்டிலும் தனது கை வரிசையை காட்ட துவங்கிவிட்டது.. 

ஆண்கள் அணியும் ஆடை பெண்களின் பாலியல் உணர்வுகளையும்.பெண்கள் அணியும் ஆடை ஆண்களின் பாலியல் உணர்வுகளையும் தூண்டும்படி அமைந்துவிடுகின்றன.. 

தனது சமய கலாச்சாரம் கூறியுள்ள ஆடைகளின் பெயரில் இன்று உள்ளாடைகள் வெளியில் தெரியும்படியாகவும் உருப்புகள் உருப்படியாய் தெரியும்படி இருக்கமாகவும் ஆண், பெண் இருபாலாரும் ஆடைகளை அணிந்து வெளியில் நடமாடுகின்றனர்..

இதுவும் இன்று அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது..

நாளுக்கு நால் சிறுவர் துஸ்பிரயோகம் , கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதற்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுக்கொண்டும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டும் செல்கின்றது, 

ஆனால் யாருமே அடிப்படையை சிந்திப்பதில்லை. அண்மையிலும் பல கூட்டு வண்புணர்வுகள், வண்புணர்வின் பின்னர் கொலை செய்தல் போன்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளோம் அதற்கு பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றது. 

ஆனாலும் நாம் அதை விடுத்து மாற்றி யோசித்து பார்த்தால் ஏதோ ஒன்று இவனை தூண்டியிருப்பது புலனாகின்றது.

அந்த ஒன்று தான் என்ன என நாம் ஒவ்வொருவரும் சாதாரண மனிதர்களாக சிந்திப்போமேயானால் 50 வீதத்திற்கும் அதிகமானோர் கண்டுபிடிப்பது இந்த ஆடைக்கலாச்சாரமாகவே இருக்கும்.

சிந்திப்பதோடு நின்றுவிடாமல் ஒரு படி மேலே சென்று நமது சமூகம், நமது குடும்பம் என நினைத்து நமது சகோதர சகோதரி விஷேடமாக பெண்களின் ஆடை விடயத்தில் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்

பஸ்ஸை விட்டு விட்டு கை காட்டாமல் பஸ் வருமுன் கை காட்டுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்..

இருக்கமான அபாயா, இருக்கமான குட்டப்பாவாடை, இருக்கமான டீ சேட் அணிவதை பெண்களும் உள்ளாடை காட்டி உடை அணிவதை ஆண்களும் குறைக்க வேண்டும், 

அதுமட்டுமல்லாமல் பெண்களை முட்டிக்கு மேல் ஆடையணிய வைக்கும் கலாச்சாரமுடைய பாடசாலைகளிலும் ஆடைக்கலாச்சாரம் மாற்றப்படல் வேண்டும் .

ஒரு விழிப்புணர்வுக்காக இதனை நான் உங்களுடன் பகிர்கின்றேன், உங்களால் முடிந்தால் 'பாடசாலைகளிலும் ஆடைக்கலாச்சாரம் மாற்றப்படல் வேண்டும்' இதனை உரியவர்களின் கவனத்திற்கு எத்தி வையுங்கள்,

அதிகம் ஷேர் செய்து வரவிருக்கும் ஆபத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வை எம் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்துவோம்.
கபூர் நிப்றாஸ்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -