எப்.முபாரக்-
மூதூர்- இரால்குழி பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி 9 கிலோ கிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றம் 30,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதேவேளை, குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பிரிதொரு நபரின் மோட்டார் சைக்கிள் என்பதால் மோட்டார் சைக்களில் உரிமையாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை ஒன்றில் விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன், ஜனவரி மாதம் 1ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மூதூர் நீதிமன்ற நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
