மக்சூத் முஹம்மட் றம்சான்-
மாகண கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ செய்தியில் 150 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் அக்கறைப்பற்று வலயத்தில் அதிகமாக இருந்தும் தொடர்ந்தும் பொத்துவில் உப வலயத்தில் கடந்த பல வருடங்களாக 100 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் குறைவாக இருக்கின்றனர்.
இச் செய்தியினை உண்மை நிலையை அறியவும் பொத்துவில் உப வலயத்தில் நிலவி வரும் ஆசிரியர் தட்டுப்பாடு சம்பந்தமாகவும் இவ்வருடம் பொத்துவிலை விட்டு விடுகையில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்களை நிபர்த்தி செய்ய கோரியும் நான் அக்கறைப்பற்று வலயக்கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அக்கறைப்பற்று வலயத்தில் 130 தொடக்கம் 140 ஆசிரிகள் குறைவாக இருப்பதாகவும் அவற்றை சரி செய்ய முயற்சிப்பாதாகவும் கூறி இருந்தார்.
அவ்வாறு 130 தொடக்கம் 140 ஆசிரியர்கள் உண்மையில் அக்கறைப்பற்று வலயத்தில் குறைவாக இருக்குமானால் வலயக்கல்வி அதிகாரியின் கூற்றுப்படி இவ்விடயத்தை நாம் ஆராய்ந்தால் அக்கறைப்பற்று வலயத்தில் ஏற்பட்டு இருக்கும் ஆசிரியர் தட்டுப்பாடுகளை மொத்தமாக பொத்துவில் கோட்டத்திற்கும் மிகுதியை அட்டாளைச்சேனைக்குமே இடப்பட்டு பிரதேசவாதம் காட்டப்பட்டு இருக்கின்றது என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது, இவ்வாறு கல்வியில் பிரதேசவாதம் காட்டும் அக்கறைப்பற்று வலயத்தின் கீழ் ஏனைய ஊர் பாடசாலைகள் எவ்வாறு செயற்பட முடியும் ?
என்பதை எமது பிரதேச அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும் ஏன் மாகணகல்வி அமைச்சரும் சிந்திக்கவில்லை??
