முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் மாவனெல்லையை சேர்ந்த முஹம்மட் நிஸ்ராஸ் மரணம்..!

க.கிஷாந்தன்-
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில் 16.12.2015 இன்று பிற்பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் இறம்பொடை பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவருடன் பயணித்த சிறுவர்கள் இருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.

மேற்படி நால்வரும் முச்சக்கரவண்டியில் மாவனெல்லையிலிருந்து வெளிமடைக்கு மரண வீடொன்றுக்காக சென்றுவிட்டு மீண்டும் மாவனெல்லைக்கு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -