அபு அலா –
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் ஒவ்வாரு பொற்றோரும் ரூபா 500 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி இன்று (06) தெரிவித்தார்.
இதற்கமைவாக, 2013/17 அரச சுற்று நிருபம் இதனை வலியுறுத்திக் கூறுவதாகவும், அங்கத்துவம் பெற்ற பெற்றோர்கள் மாத்திரமே பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் சுற்று நிருபம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
மேலும் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக 500 ரூபா பணத்தினை பாடசாலையில் செலுத்தி அற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி கேட்டுக்கொண்டுள்ளார்.
