அப்துல் அஸீஸ்-
கல்முனை பிரதேசத்தின் காசிம் வீதி மற்றும் தைக்கா வீதி அபிவிருத்திப்பணிகள் ரூபா 37,296,109/- நிதி ஒதுக்கீட்டில் நேற்று (4) மலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும், விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ்யின் முயற்சியின் பயனாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைனால் மேட்கொள்ளப்படும் இவ் வீதிகளில், காசிம் வீதி அபிவிருத்திப்பணிக்கு 32,296,109ரூபாவும், தைக்கா வீதி அபிவிருத்திப்பணிக்கு 5மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும், விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ்யினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இன் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலன் பிராந்திய பொறுப்பதிகாரி பொறியியாலாளர் எம்.பி. அலியார், பொறியியாலாளர் சட்.ஏ.எம். அஸ்மீர் ஆகியோர் உட்பட சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




