அரசின் 31வது அரச கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ருடாவருடம் அரசினால் கலை, கலாச்சார துறைகளில் உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அரசின் 31வது அரச கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு நேற்று (15) மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் 'ஸ்ரீலங்கா யூத்' மண்டபத்தில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவின் தலைமையில் இடம் பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றினைந்து நடாத்தும் இவ்விழாவில் இவ்வருடமும் மூவினத்தைச் சேர்ந்த சுமார் 301 கலைஞர்களுக்க கலாபூஷண விருதும் பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாந்து, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமா மகேஸ்வரன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட அமைச்சினதும், திணைக்களங்களினதும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -