பிரான்ஸில் உள்ள சுமார் 100 முதல் 160 பள்ளிவாசல்களை அந்த நாட்டு அரசு மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பள்ளிவாசல்கள் சட்டப்படி பதிவு செய்யாமலும் சட்டப்படியான அங்கீகாரம் இன்றியும் நடத்திச் செல்லப்படுவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத ஆடைகளை பயன்படுத்தி போதைவஸ்து கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் கள்வர்கள் ஈடுபட்டுவருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பயங்கர செயற்பாடுகளால் அனைவரும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் மொத்தமாக 2600 பள்ளிவாசல்கள் இருப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
